வரலாறு | மாவட்ட நிர்வாகம் | மாவட்டம் ஒரு பார்வை | சுற்றுலா தளங்கள் | மக்கள் பிரதிநிதிகள் | நிர்வாக வரைபடம் | மின் ஆளுமை 
 புகைப்படங்கள் | புள்ளியல் கையேடு | தொலைபேசி எண்கள் | மின்னஞ்சல் முகவரிகள் | தொடர்புகள் |  முகப்பு | ஆங்கில இணையதளம்மின் ஆளுமையின் ஊக்குவிப்பு
தகவல் தொழில் நுட்பத்துறையின் தொடக்கம் மற்றும் மின் ஆளுமையில் அதன் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் செப்டம்பர் 1988ல் தேசிய தகவலியல் மையம் National Informatics Centre (NIC) மாவட்ட ஆட்சிய ர் அலுவலகம் கோயம்புத்தூரில் உருவாக்கப்பட்ட பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் தேசிய தகவல் மையத்தின் தலையாய கடமையாக தகவல் தொழில் நுட்ப கலாச்சாரத்தை மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அலுவலர்களுக்கு கொண்டு செல்வதாகும். முழுமையான கணிணிமயம் பல்வேறு நிர்வாகங்களின் செயல்பாடுகளையும் மற்றும் அதன் நிலைப்பாடுகளின் அனைத்து நிலைகளிலும் சிறந்த முடிவெடுக்க உருதுணையாக அமைகிறது.
தினசரி அலுவல்கள் கணிணி மயமாக்கப்பட்ட சில அரசின் துறைகள்
1. மாவட்ட வருவாய் அலுவலகம்
2. மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை (னுசுனுயு)
3. கருவூலகம்
4. பதிவு துறை
5. போக்குவரத்து துறை
6. நுகர் பொருள் வாணிப கழகம்
7. நகராட்சி மற்றும் நகரப் பஞ்சாயத்து துறை
8. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
9. விவசாயம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
10. மாவட்ட சமூக நலத்துறை
11. மாவட்ட கடவு சீட்டு அலுவலகம்
12. மாவட்ட நீதி மன்றம்
வருவாய் வட்ட அலுவலகங்களில் உள்ள கணிணி சேவைகள்
·கணிணி மய நில ஆவணங்கள் (தமிழ் நிலம்)
·கணிணி மய அஞ்சலக பணவிடை அச்சிடுவது மற்றும் முதியோர் உதவித் தொகை.
·சான்றிதழ்கள் கண்காணிப்பு முறைமை.
·ஊதியம் மற்றும் ECS
பொது மக்களின் உபயோகத்திற்காக பொள்ளாச்சி வருவாய் வட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள தொடுதிரை முறைமை பயிற்சி அடிப்படை மற்றும் உயர்ந்த கணிணி பயிற்சி வருவாய் துறை,பஞ்சாயத்து வளர்ச்சி, கருவூலத்துறை, பதிவுத் துறை விவசாய துறை,ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், மற்றும் போக்குவரத்துத்துறை ஊழியா;களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்வரும் கணிணி வசதிகளை பெற்றுள்ளது.
1. வின்டோஸ் 2003 மற்றும் லினெக்ஸ் சர்வர்கள்
2. வின்டோஸ் 2000 புரோபசனல் மற்றும் வின்டோஸ் XP கிளயன்ட் சிஸ்டம்ஸ்
3. மின் அஞ்சல் மற்றும் வளை தளத்திற்காக ரிமோட் அக்சஸ் சர்வர்;
4. வீடியோ கான்பரன்ஸ் வசதி மற்றும் லீஸ்டு லைன் இணைப்பு